பதுவை புனித அந்தோனியார், கத்தோலிக்க திருச்சபையின் மிகவும் பிரபலமான புனிதர்களில் ஒருவர். பதுவை நகர அந்தோனியார் பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குரு. இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் ‘பதுவைப்பதியர்’ என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் ‘பதுவைப் பதியர்’ என அழைக்கப்படுகின்றார். இவரது புனித வாழ்வும், கூரிய நுண்ணறிவும், விவிலிய ஆர்வமும் இவர் இறந்த சில வருடங்களிலேயே புனிதர் பட்டம் பெற வைத்தது. அவர் பொதுவாக குழந்தை இயேசு – அல்லது ஒரு லில்லி – அல்லது ஒரு புத்தகம் அல்லது மூன்றையும் தன் கைகளில் வைத்திருப்பதாக சித்தரிக்கப்படுகிறார். புனித அந்தோணியார் அனைத்து மக்களுக்கும் அனைத்து தேவைகளுக்கும் பதிலளிக்கக்கூடியவர். நம் கடவுளுக்கு முன்பாக அவருடைய பரிந்துரைகள் மிகவும் சக்திவாய்ந்தவை.

Bishop

தூத்துக்குடி மறைமாவட்டம், உவரி, புனித அந்தோனியார் உயர் திருத்தலத்தில் கொலுவீற்றிருக்கும் பதுவை புனிதரின் வல்லமைமிக்க பரிந்துரையின் மூலம், பலர் தங்கள் நோய் மற்றும் அனைத்து வகையான துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறார்கள். உவரியில் உள்ள பதுவை புனித அந்தோனியாரை மன்றாடி அவருடைய சக்திவாய்ந்த பரிந்துரையின் மூலம் இறைவனின் ஏராளமான ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.

மேதகு ஆயர் A. ஸ்டீபன்,
தூத்துக்குடி மறைமாவட்டம்

பகிர்வுகள்