உப்புக் காற்றை முகர்ந்து, நீலக் கடலில் நனைந்து, புதையும் மணலில் நடந்து,
பதுவையாரின் பாதம் அமர்ந்து, புதுமைகளில் மனம் தோய்ந்து,
அந்திரேயரின் அமைதியில் செபித்து, செல்வத்தாயின் கப்பலில் ஏறி இறங்கி
களியல் ஓசையில் மகிழ்ந்து, விதவித மீன் வகையை ருசித்து,
சுற்றித் திரிய ஏங்கிடும் சென்னை வாழ் உவரி மைந்தன்
- கஸ்மீர் ரோச்