Image

இறைவன் ஒளியில் நாங்கள் செல்ல வழியைச் சொன்னவரே
இறை நல்வாழ்வில் நிதமும் வாழப் பாதை தந்தவரே
எந்தன் நெஞ்சில் நீ இருந்து உண்மை நெறி செல்ல
இறைவன் வாக்கை வாழ்ந்து காட்டிட புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிகொள்ளும்.

- அபினவ் டெல்கின்
Image

முதுமை மிகு நிலப்பரப்பாம் தென்பாண்டி மண்டலத்தின்,
தெற்கு கடலோரம் ,
உவரியின் ஓயாத கடலடி ஓசையில் கோயில் கொண்டு வீற்றிருக்கும் எங்கள் அந்தோனி மாமுனிவன்.
எட்டு திக்கும் அவன் புகழ் பரவட்டும்.

- கேப்டன் ரேமண்ட்
Image

உப்புக் காற்றை முகர்ந்து, நீலக் கடலில் நனைந்து, புதையும் மணலில் நடந்து,
பதுவையாரின் பாதம் அமர்ந்து, புதுமைகளில் மனம் தோய்ந்து,
அந்திரேயரின் அமைதியில் செபித்து, செல்வத்தாயின் கப்பலில் ஏறி இறங்கி
களியல் ஓசையில் மகிழ்ந்து, விதவித மீன் வகையை ருசித்து,
சுற்றித் திரிய ஏங்கிடும் சென்னை வாழ் உவரி மைந்தன்

- கஸ்மீர் ரோச்
Image

எனது சொந்த ஊரில் இருக்கும் புனித அந்தோனியாரின் தேவாலயத்தை பற்றி எழுதுவதில் நான் மிகவும் பெருமைபடுகிறேன். நான் தேவாலயத்திற்குள் நுழையும் போதெல்லாம், மனதில் நிலவும் அமைதியை சொல்ல வார்த்தைகளே இல்லை. ஐயாவிடம் செய்யும் பிரார்த்தனைகள் அனைத்தும் செவிசாய்க்கபடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

- வினோஜ் கார்டோசா, உவரி

உங்கள் பகிர்வை சமர்ப்பிக்க

code

* தேவையான பகுதிகள்